இரத்த தானம் செய்வோம். அமுதசுரபியான நம் உடல் சுரந்து கொடுக்கும் இரத்தத்தை பிறருக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் இன்னொரு உயிரை நலமாக வாழ வைப்பது மட்டுமல்லாமல் அவ்வுயிரின் ஆசியினையும் நாம் பெற்று நலமுடன் வாழலாம். தானம் பெற்றவரின் நன்றியுணர்வு நம் குடும்பத்தை நலமோடு வாழ வைக்கும். இரத்த தானத்தை செய்வதனால் நம் உடலுக்கும் புது இரத்தம் சுரந்து புத்துணர்வினைக் கொடுக்கும். எல்லோராலும் சுலபமாக செய்ய முடிந்த ஒன்று தான். ஆனால் இதனைச் செய்ய உயர்ந்த மனத்தினால் கருணை உணர்வினை பிற உயிர்களிடமும் காட்ட வேண்டும். அவ்வகையில் நாம் கருணை உள்ளங்களாகி சிறந்த தானமாகிய இரத்த தானத்தினை செய்வோம். பல உயிர்களைக் காப்போம்.
Blood Donation
